வ்வ்

Advertisment

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்ட கோகுல கிறிஸ்டிபன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அகில இந்திய சேர்மேன் கங்காதரன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

z

முன்னதாக கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முன்பாக இருந்து நூற்றுக்கணக்கானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பி, பேரணியாக வந்தனர்.

Advertisment

zx

இந்த மாநாட்டில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாக விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி வரை பரந்து விரிந்துள்ளது கடலூர் மாவட்டம். இதனால் இம்மாவட்ட மக்கள் தலைநகரான கடலூர் சென்று தங்களுடைய பிரச்சனைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். பெரும் தொகையும், அதிக கால நேரமும் விரயமாகிறது. எனவே கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டும், விருத்தாசலத்தில் 24 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த சூரியகாந்தி, மணிலா எண்ணெய் பிழியும் டான்காப் தொழிற்சாலை பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாடுகின்றனர். 22 கோடி ரூபாய் மதிப்புடைய ஜெர்மன் நாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது. ஆகவே தொழிற்சாலையை உடனடியாக மீண்டும் திறந்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாழ்வளிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.