Advertisment

யூ.கே.ஜி. மாணவிக்கு பாலியல் தொந்தரவு! போக்சோவில் ஆசிரியர் கைது!

Virudhunagar school teacher arrested under pocso

Advertisment

விருதுநகரைச் சேர்ந்த பெரியசாமி (வயது 52), அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். யூகேஜி படித்துவரும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தொடரப்பட்ட போக்சோ வழக்கில் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவைப் பிரிந்து அம்மா வேறொரு ஊரில் பணிபுரிந்துவரும் நிலையில், பாட்டியின் பராமரிப்பில் பள்ளியில் படித்து வருகிறார் அச்சிறுமி. பேத்தியைக் குளிப்பாட்டியபோது அவளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து துடித்துப்போன பாட்டி கேட்டதும், கண்ணாடி போட்ட ஹைட்டான பெரியசாமி சார் என்று பெயரைக் குறிப்பிட்டு, பள்ளி கழிவறையில் நடந்ததைக் கூறியிருக்கிறாள்.

இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்துவிட்டு, மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் பாட்டி. அந்த மருத்துவர் அறிவுறுத்தியதன் பேரில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாட்டி புகாரளித்ததும், வழக்கு பதிவுசெய்து விசாரித்த காவல்துறையினர், ஆசிரியர் பெரியசாமியைக் கைது செய்துள்ளனர்.

POCSO Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe