பட்டாசு ஆலை விபத்தில் கருகி 5 பெண் தொழிலாளர்கள் பலி! -மதுரை அரசு மருத்துவமனையில் படுகாயமுற்ற மூவருக்கு சிகிச்சை!

மதுரை மாவட்டம் - டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள செங்குளம் ஊராட்சி பகுதியில் இயங்கி வந்த ராஜலட்சுமி பட்டாசு ஆலையில், இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 5 பெண்கள் கருகி பலியானார்கள். மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் படுகாயமுற்றனர்.

வேல்த்தாய், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள் மற்றொருவர் விபரம் தெரியவில்லை என இறந்தவர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

காயமடைந்த சுந்தரமூர்த்தி, லட்சுமி, மகாலட்சுமி ஆகியோர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில், வேறெதுவும் சடலங்கள் கிடக்கின்றனவா என்று போலீசார் தேடி வருகின்றனர்.

Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe