/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_41.jpg)
இன்றும் கூடசினிமாவில் வருவது போல் தமிழகக் கிராமங்களில் ‘ரவுடி ராஜ்ஜியம்’ நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
விருதுநகர் தாலுகா, பாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுமலை. இவர்முடி வெட்டுவதற்காக தனது இளைய மகன் முகேஷை விருதுநகருக்கு அழைத்துச் சென்றார். பிறகு, அங்கிருந்து பேருந்தில் இருவரும் கிளம்பி பாவாலி வந்துநாச்சாரம்மன் கோவிலருகில் நடந்து சென்றபோது, அந்த வழியில் மொட்டையசாமியும், செல்வமும் குடித்துவிட்டு போதையில் அலம்பல் செய்து கொண்டிருந்தனர்.
மனது பொறுக்காமல் அவர்களிடம் “குடிச்சிட்டு இப்படி அசிங்கமா பேசலாமா?” என்று கேட்டிருக்கிறார் அழகுமலை. அதற்கு அந்த இருவரும், “நீ என்ன சொல்லுறது? இங்க நாங்கதான் ரவுடி. நாங்க வச்சதுதான் சட்டம்..” என்று உளறியிருக்கின்றனர். அதோடு விடாமல், ஓடிச்சென்று செல்வம் அழகுமலையைப் பிடித்துக்கொள்ள, முதுகில் கத்தியால் குத்திய மொட்டையசாமிதிரும்பவும் கத்தியால் அழகுமலையின் கன்னத்தில் கீறியிருக்கிறார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடிவிட ரவுடிகள் இருவரும் தப்பியுள்ளனர்.
தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் அழகுமலை சிகிச்சை பெற, அவருடைய மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில், ஆமத்தூர் காவல்நிலையத்தில் மொட்டையசாமி மற்றும் செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)