வாக்காளர்களைக் கவர்ந்து வாக்குகளைப் பெறுவதற்காக, வேட்பாளர்களில் சிலர் எந்த லெவலுக்கும் இறங்கி விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம்- துலுக்கபட்டியிலும் நடந்திருக்கிறது.

Advertisment

விருதுநகர் அருகிலுள்ள துலுக்கபட்டியில், 8- வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார், சுயேச்சை வேட்பாளரான பொன்னுப் பாண்டியம்மாள். இவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சங்கர் என்பவர், வாக்காளர்கள் சிலரின் தேவையறிந்து, மது பாட்டில்கள் விநியோகம் செய்துள்ளார்.

Advertisment

virudhunagar local body election independent candidate deal  with peoples

பலவீனமான போதை ஆசாமிகள், மது மயக்கத்தில் பாட்டிலின் மீதுள்ள விசுவாசத்தால், வாக்குகளைப் பொன்னுப் பாண்டியம்மாளுக்குப் போட்டு விடுவார்களோ என்ற சந்தேகத்தில், அதே வார்டில் போட்டியிடும் ஒருவர், தேர்தல் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து விட, வச்சக்காரப்பட்டி போலீசார் சங்கரைக் கைது செய்து, அவர் வைத்திருந்த 35 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

வாக்குகளை விலை பேசுவதும், தரம் தாழ்ந்து மது விநியோகம் செய்வதும் காலத்தின் கொடுமைதான்!