விருதுநகரில் இளம்பெண் ஒருவர் 8 பேரால்வீடியோஎடுத்துமிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சிபிசிஐடிகாவலில் விசாரணை முடிந்த நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சிகொடூரத்தைபோல் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான ஹரிஹரன்,ஜூனைத்அகமது,பிரவீன்மற்றும் மாடசாமி ஆகிய 4 பேரை, 7 நாட்கள் சி.பி.சி.ஐ.டி.போலீஸ்காவலில் வைத்து விசாரிப்பதற்குஸ்ரீவில்லிபுத்தூர்வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதிஅளித்திருந்தது.அதன்படிகாவலில்எடுக்கப்பட்ட 4 பேரிடமும்சிபிசிஐடிவிசாரணை முடிந்த நிலையில், நால்வரும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நான்கு பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.