விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பில் அரிக்கேன் விளக்கு சின்னத்தில் போட்டியிட்ட லிங்கம்மாள் தோல்வியைத் தழுவினார். தனது வார்டான ராமசாமியாபுரத்தில் 56 வாக்குகள் மட்டுமே லிங்கம்மாளுக்குக் கிடைத்தது.
ஏற்கனவே உடல்நலம் குன்றியிருந்த அவருடைய கணவர் நயாபைசா (வயது 48), மனைவி அடைந்த இத்தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புலம்பியபடி இருந்தார். டிடிவி தினகரனின் போட்டோவைப் பெரிதாகப் போட்டு நான்கு வண்ண வால்போஸ்டர் அடித்து விளம்பரம் செய்தும், சொற்ப எண்ணிக்கையிலேயே வாக்குகள் கிடைத்தது அவரது குடும்பத்தைச்சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தேர்தல்முடிவுகள் நேற்று (02.01.2020) மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (03.01.2020) மாலை நயாபைசா மாரடைப்பால் உயிரிழந்தார்.