Advertisment

விருதுநகர் மாவட்டம்: எந்தெந்த தொகுதிக்கு எத்தனை சுற்றுகள்! 

Virudhunagar District vote counting rounds

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரியிலும், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீவித்யா கலைக்கல்லூரியிலும், தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

Advertisment

அதன் பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்குகளை எண்ண ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதிக்கு (325 வாக்குச்சாவடிகளுக்கு) 23 சுற்றுகள், அருப்புக்கோட்டை தொகுதிக்கு (311 வாக்குச்சாவடிகளுக்கு)22 சுற்றுகள், திருச்சுழி தொகுதிக்கு (318 வாக்குச்சாவடிகளுக்கு)23 சுற்றுகள், சாத்தூர் தொகுதிக்கு (351 வாக்குச்சாவடிகளுக்கு) 25 சுற்றுகள் என்ற அடிப்படையில் எண்ணப்படுகின்றன. சிவகாசி தொகுதிக்கு (368 வாக்குச்சாவடிகளுக்கு) 26 சுற்றுகளில் வாக்குகள்எண்ணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிக்கு (357 வாக்குச்சாவடிகளுக்கு) 26 சுற்றுகளில்எண்ணப்படுகின்றன.

Advertisment

ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு (340 வாக்குச்சாவடிகளுக்கு) 24 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஒருவேளை இவர் வெற்றிபெற்றால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்பதால், இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கை கவனத்திற்குரிய ஒன்றாகவுள்ளது. இதேபோல், சிவகாசி தொகுதியில் இருந்து தொகுதி மாறிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி போட்டியிடும் ராஜபாளையம் தொகுதியும் கவனத்துக்குரியதாக உள்ளது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக, பாஜக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் தவிர, 11 சுயேட்சைகள் உள்ளிட்ட 18 பேர் போட்டியிட்டனர். விருதுநகரில் 71.27 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இத்தொகுதியில் 24 சுற்றுக்கள் எண்ணப்பட உள்ளன.

VOTE COUNTING Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe