virudhunagar district sivakasi temple incident police investigation

Advertisment

சிவகாசியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரங்களில் தீப்பற்றி எரிந்தது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பராசக்தி காலனியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதால் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கோயில் ராஜகோபுரத்தில் சாரங்கள் அமைக்கப்பட்டுவண்ணப்பூச்சு உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று (20/11/2022) இரவு கோயில் வெளியே நடந்த திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பறந்த தீப்பொறி ஒன்று ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரங்களில் விழுந்து தீப்பற்றியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

Advertisment

தீ விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.