Advertisment

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! -படுகாயமுற்ற தொழிலாளிக்கு மதுரையில் சிகிச்சை!

VIRUDHUNAGAR DISTRICT CRACKERS PLANT INCIDENT  HOSPITAL

விருதுநகர் அருகிலுள்ள நாட்டார் மங்கலத்தில் இயங்கிய தனியார்பட்டாசு ஆலையில் இன்று (07/07/2020) வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், ராமகுருநாதன் என்ற தொழிலாளி படுகாயமுற்றார். ஒரு அறை மட்டும் இடிந்து தரைமட்டமானது.

Advertisment

83 அறைகள் உள்ள அந்தப் பட்டாசு ஆலையில், 140- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலை பார்த்தனர். தற்போது, காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே அங்கு வேலை நடைபெற்று வருகிறது. காலை 10.00 மணியளவில், ராமகுருநாதன், தனது வேலையை முடித்துவிட்டு, அறையைச் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், தூக்கி எறியப்பட்டார். காயமுற்ற அவர், முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

வெடிச்சத்தம் கேட்டதும் மற்ற பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து, ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, போர்மேன் சண்முகையாவைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

crackers plant incident VIRUDHUNAGAR DISTRICT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe