ஊரடங்கு நேரத்தில் உதவி செய்வதில்,ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது.

Advertisment

இது சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் செய்த நற்காரியங்கள்-சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியத்தில், தோட்டக்கலைத்துறை சார்பாக ரூ.200 மதிப்புள்ள 8 வகையான காய்கறிகளை, குறைந்த விலையில் ரூ.70- க்கு பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறார்.

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples

சாத்தூர் நகராட்சியிலுள்ள 24 வார்டுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அளித்திடும் கபசுர குடிநீரை பொது மக்கள் பருகச் செய்திருக்கிறார்.மேலும், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு. காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை கொடுத்துள்ளார்.

Advertisment

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples

சாத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து,சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சி தலைவர்களுக்கும் ஐயாயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளார்.மேலும், சாத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்குஅரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைச் சாமான்கள் கிடைக்கச் செய்துள்ளார்.

virudhunagar district admk and dmk parties mlas provide help peoples

http://onelink.to/nknapp

சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ராஜபாளையத்தில் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் என மூவரும் வரிந்துகட்டி மக்களைச் சந்தித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

மக்கள் பிரதிநிதிகளின்நற்சேவைகள் தொடரட்டும்!