சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவரப்படுத்தியுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் விருதுநகரில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருமண மண்டபம் நடத்துபவர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கத்தினர், அனைத்துமத வழிபாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருமணங்களின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வரக்கூடாது, பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஐம்பது பேருக்கு மேல் பணியாற்றக்கூடாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.