Skip to main content

விருதுநகர் பாலியல் வழக்கு: சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய முதல்வர் 

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Virudhunagar case handover to cbcid

 

விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி பழகி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவுசெய்துள்ளார். பின், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, தன்னுடைய நண்பர்களுடனும் நெருக்கமாக இருக்கும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜீனைத் அகமது, நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் அந்த மாணவியை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். 

 

அந்த இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, 8 பேரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் புலன்விசாரணையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், விரைந்து தண்டனை வழங்குவதில் இந்த வழக்கு இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்றும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்