/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_250.jpg)
விருதுநகரில் 8 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்ணின் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், ஐந்து குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை நடந்ததாகச் சொல்லப்படும் இடங்கள், பதிவான வீடியோ, புகைப்படங்கள், மிரட்டிய நபர்கள் குறித்தெல்லாம் விசாரிப்பதற்கு சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் விருதுநகர் – சூலக்கரையிலுள்ள உள்ள கார்மென்ட்ஸில் 6 மாத காலம் ஹெல்ப்பர் வேலை பார்த்தேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். நான் வேலைக்குச் சென்றபோது கார்மெண்ட்ஸ் வேனுக்காக காத்திருக்கும் சமயங்களில், ஹரிஹரன் என்பவர் 20-8-2021 அன்று என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். இரண்டுநாள் கழித்து நானும் காதலிப்பதாகச் சொன்னேன். அதன்பிறகு, போனில் அடிக்கடி பேசினோம். 10 நாட்கள் கழித்து, அவனுடைய மெடிக்கல் குடோனுக்கு என்னைக் கூட்டிச் சென்றவன், தன்னுடைய சமூகம் குறித்து சொன்னான். நான்தான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேனே என்று சொல்லி, என்னை கட்டாயப்படுத்தி தனிமையில் இருக்கவைத்தான். இந்த நேரத்தில், என் அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். இந்த விஷயத்தை ஹரிஹரனிடம் சொல்லி, என் வீட்டில் வந்து பெண் கேளு என்றேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2997.jpg)
அவன் என் காதலை அலட்சியம் செய்தான். அதனால், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று அவனிடம் சொன்னேன். அதற்கு அவன், அப்படியெல்லாம் என்னை விட்டு நீ போய்விட முடியாது. உன் செல்லுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன், பாரு என்றான். அவன் எனக்கு அனுப்பிய வீடியோவில், நாங்கள் தனிமையில் இருந்த காட்சிகள் இருந்தது. அவனைச் சத்தம் போட்டபோது, அந்த வீடியோவை பரப்பிவிடுவேன் என மிரட்டினான். மேலும், அந்த பயத்தை பயன்படுத்தி மீண்டும் இரண்டு முறை மெடிக்கல் குடோனுக்கு அழைத்து தனிமையில் இருக்கச் செய்தான்.
அதேபோல், மற்றொருமுறை அழைத்த போது நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். ஆத்திரத்தில் அந்த வீடியோவை, அவனுடைய நட்பு வட்டத்தில் இருந்த பள்ளி மாணவனான் ஒருவனுக்கு அனுப்பினான். அதன்பிறகு அவனும் அவனது நண்பன் ஒருவனும் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். நான் ஹரிஹரனிடம் இதுதொடர்பாக சண்டை போட்டேன். அந்த இருவரையும் கண்டித்து அனுப்புவோம், என்று அழைத்து மூவரும் என்னிடம் அத்துமீறினர்.
அதுபோல், அந்த சிறுவர்களில் ஒருவனின் நண்பன், அவன் நண்பன் பிரவீன், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமி உள்ளிட்டவர்கள் என்னை பயமுறுத்தி கட்டாயப்படச் செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு ஹரிஹரன் எனக்கு போன் பண்ணி, வீடியோ அழித்துவிடுவதாக கூறி மெடிக்கல் குடோனுக்கு வரச்சொன்னான். அவன் சொன்னதை நம்பிச் சென்றேன். அங்கே ஹரிஹரனும் அவனுடைய நண்பன் ஜுனத் அகமதுவும் இருந்தார்கள். அங்கு ஜுனத் அகமது என்னிடம் வலுக்கட்டாயமாக வரம்புமீறினான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_854.jpg)
அதன்பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. மேலும், சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவேன் என ஹரிஹரன் மிரட்டினான். பிறகுதான் Women Helpline 181-க்கு போன் செய்தேன். காவல்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கே வந்து, என்னைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நானும் ஹரிஹரன் மற்றும் அவனுடைய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டேன்.’ என உருக்கமாக விவரித்துள்ளார்.
முறையாக சிபிசிஐடி விசாரணை நடந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, இந்த வழக்கின் குற்றவாளிகளின் கோரமுகம் முழுவதும் தெரியவரும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)