அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nirmala devi123333.jpg)
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நிர்மலா தேவி திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் நிர்மலா தேவி மீது தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அக்டோபர் 23- ஆம் தேதிமீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பேராசிரியர் நிர்மலாதேவியை ஆம்லன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
  
 Follow Us