/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 2_52.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கிளைச்சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக, அவரது மனைவி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நெய்வேலி காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும். செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். இது மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வமுருகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி நேற்று (09/11/2020) விசாரணை தொடங்கியது. நெய்வேலி காவல் நிலையம் மற்றும் கிளைச்சிறைக்கு நேரடியாக சென்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us