VIRUDHACHALAM POLICE STATION PRISON INCIDENT HOSPITAL

கடலூரில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், காவல் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்த நிலையில், தான் எந்தவித குற்றத்திலும் ஈடுபடவில்லை எனக் கூறி பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் காவல்துறையினர்.

இச்சம்பவம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment