விருத்தாச்சலம் அருகே ஒரு பிரிவினர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக சிவகுமார் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் டிக் டாக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமுக இன பெண்களையும் தகாத முறையில் திட்டி பதிவேற்றம் செய்திருந்தார். இதனால் விருத்தாசலம் பகுதியில் இரு சமூகத்துக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. விரைந்து செயல்பட்ட விருத்தாச்சலம் காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி விருத்தாசலம் காவல் துறையினர் சிவக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.