விருத்தாசலம் அருகே கார் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு!

virudhachalam high way car incident

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரின்மனைவி பாத்திமுத்து ஜொகரா (30). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு (20/09/2020) சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இராமநாதப்புரத்துக்கு காரில் புறப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று (21/09/2020) அதிகாலை ஒரு மணியளவில் கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் அருகே சென்றபோது, எதிரே வந்த ஈச்சர் லாரி (யு- டர்னில்) திடீரென வளையும் போது, கார் மீது பலமாக மோதியது. இதில் கார் டிரைவர் முகமது நஸ்ருல்லா (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த பாத்திமுத்து ஜொகரா, அவரது மகன் முகமது சைனுல்லாபுதீன் (13), மகள்கள் ஷாஜிதா பாதுஷா, சூரியா மரியம் ஆகிய நால்வரும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் முகமது சைனுல்லாபுதீன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாத்திமா ஜெகரா, அவரது 2 மகள்கள் ஆகிய மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

CAR INCIDENT Cuddalore virudhachalam
இதையும் படியுங்கள்
Subscribe