Advertisment

அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த முதியவர் உயிரிழப்பு! 

virudhachalam

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இன்று (12.05.2020) விருத்தாசலம் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வீராசாமியின் வயலுக்கு மேல் சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இந்நிலையில் தனது வயலுக்கு சென்ற வீராசாமி அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

Electricity rain Farmers virudhachalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe