விருத்தாசலம் அருகே அண்ணியை கொலை செய்து, தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்த கொழுந்தனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எடச்சித்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி - சரோஜோ தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணமாகிய நிலையில் கடைசி பையனான ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் ஆகாத நிலையில், கேரளாவில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

ஒரே குடும்பத்தில் அனைவரும் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார் ஆறுமுகம். இந்நிலையில் சின்னசாமியின் இரண்டாவது மகனான குழந்தைவேலு மனைவி சிவா (எ) சிவகாமியை வீட்டில் விட்டு, விவசாய வேலைக்கு சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் இருந்த குழந்தை வேலுவின் மனைவி சிவகாமியை, குழந்தைவேலுவின் தம்பியான ஆறுமுகம் இரும்பு பைப்பால் சிவகாமியின் தலையில் அடித்து பலமாக தாக்கியுள்ளார். சிவகாமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் மயங்கி நிலையில் கீழே கிடந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவகாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Advertisment

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகாமி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்ததை பார்த்த ஆறுமுகம், வீட்டுக்குள்ளே சென்று துணியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மங்கலம்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரண்டு சம்பவங்கள் அப்பகுதியில் நடந்து உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இச்சம்பவத்தில் கொலைக்கான காரணங்கள் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.