Skip to main content

நடுவீட்டில் புகுந்த வெள்ளம்... சோப்பு போட்டு ஆனந்த குளியல் போட்ட நபர்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

jl

 

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை வெளுத்து வாங்கிய கனமழையால், இன்னும் தலைநகரில் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. வட மாவட்டங்களில் சுழன்றடித்த கனமழை தற்போது தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இணையதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், நடுவீட்டில் அமர்ந்து கொண்டு மத்திய வயது உடைய ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே குளிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. வீட்டிற்குள் புகுந்த மழை நீரில் மனுசன் எப்படி என்ஜாய் செய்கிறார் என்று சிலரும், வீடு முழுவதும் தண்ணீர் இருக்கும் போது உனக்கு என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கிறது என்று சிலரும் அந்த வீடியோவில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மனுலாம் வேஸ்ட்.. ஒட்றா போஸ்டர... அன்பு குழுவின் அலப்பறை!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

poster has been put up in Tirunelveli asking to control the stray dogs

 

அண்மை காலமாக தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தெரு நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடங்கி ஓய்விற்காக நடைபயிற்சி செய்யும் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் ஒன்றாக திரண்டு விரட்டுகிறது. மேலும் பலரை கடித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படியான சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது. 

 

அந்த வகையில் சமீபத்தில் சென்னை ராயபுரத்தில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவர்கள் உட்பட 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரையும் கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். அந்த நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் நாய்க்கு வெறிநாய்(ரேபிஸ்) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அந்த நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு இடங்களில் தெருநாய்களின் பிரச்சனை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிகை வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் திருநெல்வேலியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திருநெல்வேலி 36 வது வார்டை கலக்கிக் கொண்டிருக்கும் ‘அன்பு’ குழுவின் உறுப்பினர்கள் என்று தொடங்கும் அந்த போஸ்டரில், “ பெயர் - புன்னிய மூர்த்தி, வயது - 5மாதங்கள், குணம் - சண்டை இழுத்தல், கடிபட்டவர்கள் - 1; பெயர் - கலத்தூர் தட்சணா மூர்த்தி, வயது - 3, குணம் - கடித்து வைத்தல், கடிபட்டவர்கள் - 16 பேர்; பெயர் - வழுவகுடி சுந்தர மூர்த்தி, வயது - 3, குணம் - ஆண்களை மட்டும் குறிவைத்து விரட்டுதல், கடிபட்டவர்கள் - 6 பேர்; பெயர் - கலத்தூர் காலனிதெரு சத்தியமூர்த்தி, வயது - 4, குணம் - சங்க தலைவனாக பாவித்தல்; கடிபட்டவர்கள் - 10 பேர்; பெயர் - வேலக்குடி ராம் மூர்த்தி, வயது - 5, குணம் - பதுங்கி இருந்து விரட்டுதல்; கடிபட்டவர்கள் - குறிப்பிடப்படவில்லை” என்று நாய்களையும் சேர்த்து புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் அந்த போஸ்டரில், “இவர்களை கட்டுப்படுத்த பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வார்டு உறுப்பினர் மற்றும் நிர்வாகத்திற்கு எங்களது கோடான கோடி நன்றிகள்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

Next Story

வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Chief Minister M.K.Stalin condolence on Velammal grandmother

 

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் கொரோனா கால பேரிடர் நிவாரணத் தொகையைப் பெற்ற மகிழ்ச்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வேலம்மாள் பாட்டி. இவர் கடந்த ஒரு சில தினங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நேற்று இரவு உயிரிழந்தார். வேலம்மாள் பாட்டி உயிரிழந்த சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், வேலம்மாள் பாட்டி மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகத் திமுக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றபோது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக, அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலம்மாள் பாட்டி புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, “இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு” எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.