Advertisment

வெளியான வைரல் வீடியோ... திருமாவளவன் விளக்கம்!

 Viral video released ... Thirumavalavan explanation!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வீடியோவில் மழை நீர் சூழ்ந்த இடத்தில் இருக்கும் திருமாவளவன் மழைநீரில் கால் வைக்காமல் வரிசையாக இருந்த இருக்கைகள் மீது ஒன்றன்பின் ஒன்றாகக் கால் வைத்து நடந்து சென்றார். அதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த தொண்டர்கள் இரும்பு இருக்கை மேல் அவர் நிற்க, அவரை பல்லக்குபோல் அசைத்துத் தூக்கிச் சென்றனர். இறுதிவரை மழைநீர் காலில் படாத வண்ணம்காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார் திருமாவளவன். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளத்தில் சர்ச்சையானது.

Advertisment

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து திருமாவளவன் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், 'நான் தங்கியுள்ளது வீடு அல்ல ஒரு அறக்கட்டளை. ஒவ்வொரு மழையின் பொழுதும் அங்கு வெள்ள நீர் சூழ்ந்து கொள்ளும். டெல்லிக்கு அவசரமாக நான் போகவேண்டிய கட்டாயம் இருந்ததால் இருக்கை மீது ஏறி நடந்தேன். அவசரமாகப் புறப்படும் நான் கீழே விழாமல் இருக்கத் தொண்டர்கள் என்னைப் பிடித்துக்கொண்டனர்' எனக்கூறியுள்ளார்.

Advertisment

thiruma valavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe