Advertisment

வைரலான விபத்து... போலீசாரின் உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்!

Viral accident ... Helmet that saved the life of the police

திருச்சி மாநகர ஆயுதப்படை காவலர் ஒருவர், முதல் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் வசித்துவருகிறார். நேற்று முன்தினம் (20.12.2021) பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கே.கே. நகர் பிரதான சாலையில் கடந்து சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து சறுக்கியபடி சென்றது.

Advertisment

இதனால் கிழே விழுந்த அவர் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். மேலும், இவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயமின்றி உயிர் தப்பினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். மேலும், சறுக்கியபடி காவலர் கீழே விழும் சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisment

accident police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe