Skip to main content

ஊரடங்கு விதிகள் மீறல்: அடுத்தடுத்து பூட்டி சீல் வைக்கப்படும் கடைகள்!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

Violation of curfew rules; Consecutive locked and sealed stores!

 

கரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிவரை அத்தியாவசியக் கடைகளான மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள் ஆகியவை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி தந்துள்ளது அரசாங்கம். இந்த அனுமதியைப் பெரும்பான்மை பொதுமக்களும் வியாபாரிகளும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசம் சரியாக அணியாமல் பொருட்களை வாங்க வருவது, ஆட்டோக்கள் அடைத்துக்கொண்டு செல்வது என்றிருக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எச்சரித்துள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது மாவட்ட நிர்வாகம். வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் உள்ளிட்ட காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அறிவித்த நேரத்தைக் கடந்து முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் இயங்கி வந்த டீக்கடை , ஸ்வீட் கடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர். 

 

Violation of curfew rules; Consecutive locked and sealed stores!

 

மேலும், முகக்கவசம் அணியாமல் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை நிறுத்திய நகரக் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி, அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். திருப்பத்தூர் மாவட்டம் மட்டும்மல்லாமல் வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபோன்று விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது பூட்டி சீல் வைக்கும் அதிரடிகள் அடுத்தடுத்து நடந்தபடியே உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தண்ணீர் கேட்டு பேசிய வார்டு உறுப்பினரை அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
The husband of the Panchayat Council Chairman slandered the ward member who asked for water!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராததால் 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கே பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தொலைப்பேசியை எடுத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணனிடம், 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தன் வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதெல்லாம் பிரச்சனைன்னு இன்னொரு முறை பேசன.. என அவதூறாக பேசியதாக கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 8வது வார்டு உறுப்பினர் இளமதி ஆகியோர் கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணனை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவுக்கு பதிலாக அவருடைய கணவர் செயல்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசியதால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.‌