இந்துக்களின் முக்கிய விழாக்களின் ஒன்றான விநாயகர் சதூர்த்தி இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறது. விழாவின் போது விநாயகர் சிலைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம் விநாயகர் சதூர்த்தியன்று வழிபடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ரயில் வழியாக விநாயகர் சிலைகள் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து சிலைகள் தமிழகத்தின் பல இடங்களுக்கு வழிபாட்டிற்காக அனுப்பிவைக்கப்பட உள்ளன.