விநாயகர் சதூர்த்தி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்றைய தினம் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
இந்து முன்னனி சார்பில் சென்னை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. திருவல்லிக்கேணி வழியாக மெரினா கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.