சென்னையில் பல இடங்களிலிருந்து சுமார் 2000 திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுவருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பல பகுதிகளில் சுமார் 2500-கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் 15,16,17 ஆகிய தேதிகளில் கடலில் கரைக்கப்பட வேண்டும் என்று போலீசார் அறிவித்திருந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று சுமார் 2000 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், எண்ணூர், திருவொற்றியூர் கடல்பகுதிகளில் கரைக்க அனுமதிவழங்கப்பட்டுவிநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வல நிகழ்ச்சி இன்று கலைக்கட்டியதுபாதுகாப்பளிக்க சுமார் 15,000 திற்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.