/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vpo.jpg)
திருச்செங்கோட்டில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள கிரிவலப்பாதை பிரிவில் இயங்கி வருகின்ற ஒரு தேவாலயத்தின் பகுதியை சாலை விரிவாக்கத்திற்கு காலி செய்து கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு பிள்ளையார் சிலை வைத்து ஒரு தரப்பினர் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் சிலையை அகற்ற முடியாது எனத் தெரிவித்ததால் அங்கு மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் இருதரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் சில மணிநேரம் அங்கு மோதல் போக்கு தொடர்ந்து நீடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)