/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nellai fire1.jpg)
நேற்றய தினம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 34 விநாயகர் சிலைகள் விநாயகர் குழு அமைப்பின் மூலமாக குண்டாறில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த வழியாக போகக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அடுத்து இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கல்வீச்சு சம்பவம் நடந்தது. அதில், இரண்டு வீடுகளின் மீது பெட்டோல் குண்டு வீசப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nellai fire2.jpg)
பின்னர், மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் மற்றும் ஆட்சியர் சில்பா தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனிடையே அருகில் உள்ள தென்காசி நகரில் கூலக்கடை பஜாரில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் அருகில் உள்ள பேன்சி ஸ்டோர் ஆகிய இரண்டு கடைகளூக்கும் நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பூட்டப்பட்டிருந்த அந்த இரண்டு கடைகளிலும் முன் பக்கம் மட்டுமே சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எஸ்பி அருண் சக்திகுமார் சம்பவ இடத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sengottai.jpg)
செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் நடந்தது. இதில் கல்வீச்சி, பாட்டில் உள்ளிட்டவைகளை வீசி மோதல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக் கப்பட்டனர். நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது.
இந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிக்கு நேற்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுகுணா சிங் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய கலெக்டர், நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகளை எடுத்து செல்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. வழக்கம்போல் எந்த இடங்கள் வழியாக ஊர்வலம் செல்வார்களோ, அந்த வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஊர்வலம் நடைபெறும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sengottai 001.jpg)
செங்கோட்டையில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தென்காசி, செங்கோட்டை ஆகிய தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்த இடத்தில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதோ, அந்த இடத்தில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு இடங்களில் கரைக்க அனுமதி கிடையாது. மேலும் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளை இன்று (நேற்று) மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.
Follow Us