க்

Advertisment

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த வகுக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்தும், பழைய முறைப்படி அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்துவதற்கு சிலைகளை கரைப்பதற்கு புதிய விதிகளை உருவாக்க கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், கரைப்பதற்கும், உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தடையில்லாச் சான்று பெற்று, நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என விதிகளை வகுத்து தமிழக அரசு, கடந்த 9ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

Advertisment

இந்த புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பின் தேசிய தலைவர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.குறுகிய கால அவகாசத்தில் தடையில்லா சான்றுகள் பெற முடியாது என்பதால், நடப்பாண்டு பழைய முறைப்படி விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

------