Vinayagar chaturthi procession youth incident in tiruppur

திருப்பூரில் விநாயகர் சதுரத்தி ஊர்வலத்தின் போது இரு தரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் கடந்த 8ஆம் தேதி (08.09.2024) சுமார் 600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த சிலைகளை ஆற்றில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். அதன்படி திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதியான டவுன்ஹால் பகுதி வழியாக ஆலங்காடு பகுதியில் நடைபெறக்கூடிய இந்து முன்னணி கூட்டத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்து விநாயர்கள் சிலைகளும் உர்வலமாகவந்து கொண்டிருந்தன.

Advertisment

அப்போது திருப்பூர் எம்.எஸ்.நகர் என்ற பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதலை ஏற்பட்டது. அதாவது தங்கள் பகுதி விநாயகர் தான் முன்னாள் செல்ல வேண்டும் என ஒரு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு பின்னால் வந்த மற்றொரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினிரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இரு தரப்பு இளைஞர்களையும்அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.