Advertisment

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அத்துமீறல்-வேட்டியை அவிழ்த்து பெண் இன்ஸ்பெக்டர் மீது சுழற்றி வீசி ரகளை!

 Vinayagar Chaturthi Procession  - Woman inspector was untied and twirled and hurled

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

Advertisment

உயர்நீதிமன்றம் விதித்த நடைமுறைகளின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர்.இருப்பினும் ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலைகளுடன் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து பாடல்களை அலற விட்டு வழிநெடுக நடனமாடிய வண்ணம் சென்றனர்.

Advertisment

 Vinayagar Chaturthi Procession  - Woman inspector was untied and twirled and hurled

இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரே சென்றனர். சிலை ஊர்வலத்தில் பாதுகாப்புக்குச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது நடனமாடிச் சென்ற ஒரு இளைஞர் தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து சுழற்றி வீசினார். இச்சம்பவம் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தியது.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe