Viluppuram pmk members given petition to panchayat office

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வன்னியர் சங்கம் - பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களுக்கும் கிடைத்த இட ஒதுக்கீட்டை வெளியிடக்கோரியும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

ஆர்ப்பாட்டத்திற்கு திருவெண்ணெய்நல்லூர் பா.ம.க. நகரச் செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். இந்த மனுகொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தங்கஜோதி, முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வன்னிய சங்க நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரூராட்சி அலுவலகஇளநிலை உதவியாளர் பாலமுருகனிடம் மனுவை வழங்கினார்கள்.