/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/400_12.jpg)
விழுப்புரம் டவுன் சட்ட கல்லூரி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் விழுப்புரம் மாவட்ட சிபிஎம்எல் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் செண்பகவள்ளியின் கணவர் கதிர்வேலு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் டவுன் சட்ட கல்லூரி அருகே செண்பகவள்ளியும் அவரது கணவர் கதிர்வேலுவும் புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வந்துள்ளனர். இதனால் செண்பகவள்ளி போலீஸ் - மாவட்ட ஆட்சியர் என புகார் கொடுத்து அவ்வப்போது விசாரணை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த குடிசையை கொளுத்தியதோடு, கதிர்வேலு கழுத்தை அறுத்து போட்டுவிட்டு சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதிர்வேலு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)