Viluppuram

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலிசாரால் செஞ்சி அருகே மூன்று லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

கடந்த 23-06-2020 இரவு சுமார் 23.00மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்மலையனூர் அருகே கோயில் புரையூர் தோப்பில் எரிசாராயம் இருப்பதாக விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விழுப்புரம் மத்திய புலனாய்வு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் அழகிரி தலைமை காவலர் குமரன் இணைந்து கோயில் புரையூர் தோப்பு துவக்க பள்ளி பின்புறம் உள்ள ஒடைக்கு அருகில் உள்ள வைக்கோல் போரில் தேடிப் பார்த்ததில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன் 1,050 லிட்டர்) கண்டறியப்பட்டது.

Advertisment

எரி சாராயத்தின் உரிமையாளர் கொடுக்கன்குப்பம் குமார் (எ) குமார் என்பவரை கைது செய்தனர். எரி சாராயத்துடன் செஞ்சி மது அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்து வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ஆகும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.