மகன் கொலையில் தந்தை உட்பட 7 பேர் கைது...

Viluppuram case son passes away father and 7 people arrested

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நன்னேபா என்பவரது மகன் கலில் என்ற முகமது ஈசா. லாரி டிரைவரான இவர் அரபு நாடுகளில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அவரை கடந்த 31ஆம் தேதி டூவீலரில் வரும் போது வழிமறித்து வெட்டிக் கொலை செய்துள்ளது ஒரு கும்பல்.

இதுபற்றி அவரது மனைவி தில்ஷாத் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் காவல் துறையினர். அதன் அடிப்படையில் 12 நபர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையின் பெயரில் முகமது ஈஷாவின் அத்தை மகன் திருவண்ணாமலையைச் சேர்ந்த தர்வீஸ் மற்றும் அவனது நண்பர்கள் தனசேகர், சூர்யா, தஸ்தகீர், சென்னை இராயப்பேட்டையைச்சேர்ந்த ஷேக் ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட முகமது ஈசாவின் தந்தை நன்னேபா, தன்னிடம் மகன் முகம்மது ஷா அடிக்கடி தகராறு செய்ததால் மகள் வழிப் பேரன் மூலம் தன் மகனையே கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முகமது ஷாவின் தந்தை நன்னேபா, முகமது பைரோஸ், நபிஷா உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய 28 கத்தி உட்பட கொலைக்கான ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe