Advertisment

மூதாட்டி பாலியல் பலாத்காரம்: 73 வயது முதியவர் சிறையில் அடைப்பு

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி முனியம்மாள். வயது 70. முனியம்மாள் தனது வீட்டில் தனியாக படுத்துக்கொண்டு இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன் ஜானகிராமன் (வயது 73) என்ற காமகொடுரன் வீட்டினுள் நுழைந்து படுத்திருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisment

arrested

சம்பவம் அறிந்து முனியம்மாளின் மகள் தட்டிக்கேட்டபோது இருவரையும் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்றார். பாதிக்கப்பட்ட முனியம்மாள் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் ஆய்வாளர் பத்மா வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் ஜானகிராமனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருக்கோவிலூர் தாலுகா எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான்காவது படிக்கும் 9 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த அப்துல் கபூர் மகன் அப்துல் ரசாக் (வயது 58) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மா அவர்கள் வழக்கு பதிவு செய்து காம அரக்கனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

arrested old man ulundurpet villupuram
இதையும் படியுங்கள்
Subscribe