
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்துள்ளது தாயனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரவேல்.இவரது மகள் ரிஷாலினி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருந்தாளுநர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ரிஷாலினி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. மகளை நீண்ட நேரம் காணாத அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், உறவினர் வீடுகளுக்குச் சென்று பார்த்தும் காணவில்லை. இந்த நிலையில், நேற்று மாலை அதே ஊரில் உள்ள பாலகோபால் என்பவரது விவசாயக் கிணற்றில் ரிஷாலினியின் உடல் பிணமாக மிதந்துள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் ரிஷாலினியின் பெற்றோர் உறவினர்கள் அவரது உடலை பார்த்துக் கதறி அழுதனர். ரிஷாலினி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாராஅல்லது கொலை செய்யப்பட்டாரா? கிணற்றுப் பகுதிக்கு எப்படி வந்தார்? இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us