Advertisment

காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதாகக் கூறி பாஜகவில் உறுப்பினராகச் சேர்ப்பு

villupuram srimushnam health insurance bjp membership incident 

மருத்துவகாப்பீட்டுத்திட்டத்தில் சேர்ப்பதாகக் கூறி பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கடலூர்மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு வந்த சில நபர்கள்அங்குள்ள பொதுமக்களிடம், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆயுஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளதுஎனவும்அதன் கீழ் பயனடைய குறிப்பிட்ட இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டுமெனவும்தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டபடிவத்தை வழங்கியுள்ளனர். மேலும் பொதுமக்களிடமிருந்து ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் தொலைபேசி எண்களை பெற்றுள்ளனர்.

Advertisment

அதன் பிறகு பொதுமக்கள் வழங்கிய ஆவணங்களை லேப்டாப்பில் பதிவேற்றம்செய்துள்ளனர்.சிறிது நேரத்தில், பொதுமக்களின் தொலைபேசி எண்ணுக்கு பாஜக உறுப்பினராகச் சேர்ந்தமைக்கு நன்றி என குறுஞ்செய்தி வந்துள்ளது. மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் இணைய கொடுக்கப்பட்ட ஆவணங்களையும், தகவல்களையும் மோசடியாக பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Insurance police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe