Advertisment

அதிரவைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை... உடந்தையாக இருந்த சிறுமியின் பெரியம்மா உட்பட 9 பேர் கைது!

vellore senji incident

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமியை கூட்டுப்பாலியல்வன்கொடுமை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் சிறுமியின் பெரியம்மா உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஒட்டியுள்ளஒருகிராமத்தில் 11 வகுப்பு சிறுமி ஒருவர் பெரியம்மாவின் ஆதரவில் வசித்து வந்தார். 10 ஆம் வகுப்புவரை அந்த சிறுமி சென்னையில் விடுதியில் தங்கி படித்துவந்த நிலையில் தாய், தந்தையை பிரிந்துசெஞ்சியில் பெரியம்மாவுடன் வாழ்ந்துவந்தார். சில நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற சிறுமி கர்ப்பமடைந்திருந்தது தெரிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிறுமியின் பெரியம்மா சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என ஒன்றும் தெரியாதுபோல் நாடகமாடியுள்ளார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் பெரியம்மாவுக்கும் அதே ஊரை சேர்ந்த 77 வயதான மண்ணாங்கட்டி என்ற முதியவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில், அவரை சந்திக்க வரும்போதெல்லாம் மண்ணாங்கட்டி சிறுமியிடம்அத்துமீறியுள்ளான். அதற்காக சிறுமியின் பெரியம்மாவிடம் பணமும் கொடுத்துள்ளான் மண்ணாங்கட்டி. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெரியம்மா மகனும்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களது நண்பர்களையும் அழைத்துவந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இப்படி தொடர் பாலியல் வன்கொடுமையால் சிறுமி சோர்வுற்று காணப்பட்ட நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதை அடுத்து மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரிவந்தது. இந்த சம்பவத்தில் சிறுமியின் பெரியம்மா, அவருடைய மகன், அவனது நண்பர்கள், சிறுமியின் பெரியம்மாவுடன் தகாத உறவில் இருந்த 77 வயது மண்ணாங்கட்டி என மொத்தம் 9 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe