villupuram senji

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஜெயபாலன் (வயது 28). இவர் மீது விழுப்புரம் மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் காவல் நிலையத்தில்கள்ளச்சாராயம் விற்றல், கள்ளச்சாராயம் கடத்துதல், அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisment

Advertisment

எனவே இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று தடுப்பு காவல்சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில் கள்ளச்சாராய குற்றவாளி ஜெயபாலன் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.