விழுப்புரம் கோட்டாச்சியர் குமரவேல் (RDO) நேற்று பத்திரிகையாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/j-ni.jpg)
மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தனக்குக் கீழே வேலை செய்பவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். தவறுக்கு துணை போக சொல்கிறார். உதாரணத்திற்கு எங்கள் அலுவலகத்தில் கிளார்க் வேலை பார்த்த அன்பானந்தன் என்பவர் 22 லட்சம் கையாடல் செய்துவிட்டு, போலீசில் வழக்கு போடப்பட்டு கைதாகி, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் அலுவலகம் வந்து என்னிடம், மாவட்ட ஆட்சியரிடம் பேசி விட்டேன். நான் கையாடல் செய்த பணத்தை திரும்ப செலுத்திவிடுகிறேன், எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார்.
நான் இங்கு பணியில் இருக்கும் வரை உங்களுக்கு இங்கு வேலை தர மாட்டேன், அரசு பணத்தை கையாடல் செய்த உங்களுக்கு மீண்டும் இங்கேயே பணி தந்தால் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்றேன். உடனே அவர் நீங்க இங்கு ஆர்டிஓ பணியில் நீடித்தால் தானே என்று என்னை மிரட்டி விட்டு போனார்.
இதற்கு முன்பே வானூர் தாலுக்காவை சேர்ந்த ஒரு வி.ஏ .ஓ வை இங்கிருந்த ஆர் டி ஓ சில பிரச்சனைகளின் அடிப்படையில் பணிமாறுதல் செய்துள்ளார். அந்த விஏஓ வை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்ற சொல்லி அவர் சார்ந்துள்ள சங்க பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் நான் ஏற்கனவே ஒரு அதிகாரிபோட்ட உத்தரவை நான் மாற்ற முடியாது என்று சொன்னேன். அதனையடுத்து வந்தநீதிமன்ற தீர்ப்பில், ஏற்கனவே உள்ள அதிகாரி உத்தரவு போட்டிருந்தால் அதை மாற்ற தேவையில்லை என்றுஅறிவுறுத்தபட்டுள்ளது.அதனை புரிந்து கொள்ளாத அந்த சங்கத்தினர் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டனர்.
நான் பயப்படவில்லை. இதை பற்றி மாவட்ட ஆட்சியர் முழுமையாக விபரம் கேட்காமல், அங்க என்னய்யா நடக்குது என்று என்னை சத்தம் போட்டு மிரட்டுகிறார். இப்படி தவறு செய்பவர்களுக்கு நான் துணை போகாததால் எனக்கு பணி மாறுதல் உத்தரவு வந்துள்ளது. இப்படி மாவட்டத்தில் பல்வேறு சீர்கேடுகள் நடக்கின்றன இதற்கு ஆட்சியர் (சுப்பிரமணியன்) வருவாய் அலுவலர் (பிரியா) இவர்களே காரணம்.
உதாரணத்திற்கு இந்த சம்பவங்களை மட்டும் சொல்லியுள்ளேன். முழுமையாக சொன்னால் விடிய விடிய சொல்லிக் கொண்டே போகலாம் என்று கொட்டி தீர்த்தார். ஆர்டிஓ குமரவேல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஆட்சியர் சுப்பிரமணியின், ஆர்டிஓ பணி மாறுதலுக்கு நான் காரணமல்ல தமிழக அளவல் 150 பேர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் இவரும் ஒருவர் என்கிறார்.
பொதுவாகவே மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மந்திரி சண்முகம் மற்றும் மா.செ.குமரகுரு ஆகியோர் மனம் நோகாதபடி சேவை செய்து வருகிறார் என்று மாவட்டம் முழுவதும் பேச்சு இருக்கிறது. இதற்காக நேர்மையான அதிகாரியான குமரவேல் பந்தாடப்படுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)