Advertisment

டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு!

v

Advertisment

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக அமமுக கட்சி சார்பாக தினகரன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரன், அம்மாவட்ட அமைச்சர் சண்முகம், முதல்வர்உள்ளிட்டவர்களை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் சி.வி.சண்முகம் பற்றி அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

Advertisment

Assembly election CV Shanmugam dinakaran
இதையும் படியுங்கள்
Subscribe