Skip to main content

காவல்துறை டிஎஸ்பி திடீர் மரணம்; அதிர்ச்சியில் போலீசார்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

 Villupuram  police department shocked by sudden death of police DSP

 

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் பெண்கள், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியில் இருந்தவர் 53 வயது வெங்கடேசன். இவர் தற்போது கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள காட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

 

நேற்று காலை விழுப்புரம் அலுவலகத்திற்கு பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு குடும்பத்தினர் கதறித் துடித்தனர். 

 

டிஎஸ்பி வெங்கடேசனின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள இரும்பேடு கிராமம். 1996 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து படிப்படியாக பணியில் உயர்ந்து தற்போது டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். இவருக்கு எழிலரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி எழிலரசி கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது நண்பர்கள் மற்றும் காவல்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நண்பனின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு; கொடூரமாகக் கொல்லப்பட்ட கணவர்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 youth incident his friend near Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் நடுவன் சிறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து பலமுறை இருவரையும் ஏற்கெனவே லட்சுமணன் கண்டித்த நிலையில் நேற்று இரவு லாவகமாக விஷ்ணு லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Next Story

நிலத்தைச் சமன் செய்துகொண்டிருந்த ஜே.சி.பி கொழுந்து விட்டு எரிந்த சம்பவம்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident of JCB burning while leveling the land

கிருஷ்ணகிரி மாவட்டம் கதவணி பகுதியைச் சேர்ந்தவர் சோனாச்சலம். இவரின் மகன் சிவராமன்(38). இவருக்கு சொந்தமாக ரூ.20 லட்சம் மதிப்பிலான ஜேசிபி உள்ளது. இவர் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஜொள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் அளவிலான நிலத்தை சமன் செய்ய வந்துள்ளார். நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தபோது ஜேசிபியில்  இருந்த பேட்டரியின் மூலம் மின்கசிவு  ஏற்பட்டு டீசல் டேங்க் மற்றும் சக்கரத்தில் தீ பற்றி தகதகவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இது குறித்து சிவராமன் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் ஜேசிபி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் எலும்பு கூடாக காட்சியளித்தது. இந்தச் சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலத்தை சமன் செய்ய சென்ற இடத்தில் ஜேசிபியில் இருந்த பேட்டரியில் மின் கசிவு காரணமாக ஜேசிபி எரிந்து நாசமான சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.