விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி காலமானதையடுத்து தனக்கு உள்ள ஒரே மகளான 18 வயதான மோனிஷாவை படிக்க வைத்து வந்துள்ளார். தாயில்லாத மகளுக்கு மருத்துவக் கனவு இருந்ததால் அவரை நீட் தேர்வுக்கு தயாராக அதற்கான தனியார் பயிற்சி மையத்திலும் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

Advertisment

Viluppuram

Advertisment

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியானதில் தான் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மரக்காணம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மோனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் நேற்று திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவியும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வு தோல்விக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூர் அருகே குழுமூரைச் சேர்ந்த அனிதா, 2018ல் விழுப்புரம் பிரதிபா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.