Advertisment

நட்பை மறக்காத கலெக்டரின் நண்பர்கள்... ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவமனை நிர்வாகம்...

villupuram mundiyampakkam hospital

Advertisment

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 லட்சம் மதிப்பிலான கட்டில்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி முன்னாள் (1993-97) மாணவர்கள் வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி பொறியியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உதவி செய்ய வேண்டிய காரணம் என்ன? வேறொன்றுமில்லை இங்கு மாவட்ட ஆட்சியராக உள்ளவர் அண்ணாதுரை. இவருடன் அந்தக் காலகட்டத்தில் ஒன்றாகப் படித்த அவரது சக மாணவ நண்பர்கள் நட்பை மறக்காமல் தங்களது நண்பர்களில் ஒருவர் மாவட்ட ஆட்சியராகத் திறம்பட செயல்படுவது கண்டும் கரோனா பாதிப்பில் மிக முக்கியமான பின்தங்கிய மாவட்டமாக விழுப்புரம் உள்ளதைக் கருத்தில் கொண்டும் ஆட்சியரின் நண்பர்கள் இந்த உதவியைச்செய்துள்ளனர்.

கல்லூரி காலத்தில் ஒன்றாகப் படித்து முடித்து அவரவர் பிரிந்து சென்று பல்வேறு ஊர்களுக்கும் பணிகளுக்கும் சென்று கரைந்து போவார்கள். அப்படிப்பட்ட மாணவ நண்பர்களில் இப்படிப்பட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

collector College students help hospital villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe