தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் ஆகிய செயல் விளக்க திட்ட உதவிகள் வழங்குதல் துவக்க விழா நடைபெற்றது.
இதில்விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி கலந்து பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். அப்போது மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயசந்திரன், விக்கிரவாண்டி வேளாண்மை இணை இயக்குனர் மாதவன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.