Advertisment

தாதா மணியால் தாக்கப்பட்ட எஸ்.ஐ.க்கு மருத்துவமனையில் சிகிச்சை (படங்கள்)

villupuram manikandan

விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் அந்த பகுதியில் ஒரு தாதாவாக செயல்பட்டு வந்தான்.

Advertisment

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருக்கு கடும் சவாலாக வலம் வந்த அவன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Advertisment

villupuram

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த கொலை வழக்குகளிலும் இவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் பதுங்கியிருந்த மணிகண்டனை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு இருந்தனர். கொரட்டூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு சென்று அவனை பிடித்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

villupuram manikandan

போலீசார் கைது செய்ய சென்ற நிலையில், ரவுடி மணிகண்டன் போலீஸ் உதவி காவல் ஆய்வாளர் பிரபுவை கத்தியால் வெட்டி தப்பிக்க முயன்றான். மேலும் போலீசாரை தாக்க முயன்ற ரவுடி மணிகண்டனை தற்காப்பிற்காக போலீசார் சுட்டனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் தாதா மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

ரவுடி மணிகண்டனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குஎடுத்துச்செல்லப்பட்டது. காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் பிரபுவுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சென்னை கொரட்டூர் பகுதியில் நடந்த இந்த என்கவுன்டர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

mani

நேற்று இரவு மணிகண்டனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்து வரப்பட்டது. இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு சார்பில் மாஜிஸ்திரேட் நேரடியாக பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர் மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai police villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe