Advertisment

மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு படிக்கும்  மாணவன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னையா தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் பிரவீன்குமார் வயது 16. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisment

villupuram incident

இந்நிலையில் இன்று மாணவனின் தனது பெரியம்மா வீடான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் வசிக்கும் ரவி மனைவி தேவி என்பவர் வீட்டிற்கு விருந்தாளியாக மதியம் சுமார் 12 மணி அளவில் சென்ற மாணவண் குளிப்பதற்காக பெரியம்மா வீட்டில் இருந்த மின்சார ஹீட்டர் மூலம் வெண்நீர் சுட வைப்பதற்காக சுவிட்ச் பாக்ஸ்சில் பிளக் சொருகும் போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரசு மருத்துவர் பரிசோதனை செய்தபோது பிரவீன் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக திருநாவலூர் காவல் நிலையத்தில் பிரவீன் குமாரின் தந்தை சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

accident incident villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe